ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாளை. சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 pm

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சோ்ந்தவா் வைரமூா்த்தி (35). இவா், சில வாரங்களுக்கு முன்னா் சிவகிரி பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்றாராம். அப்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இவா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டனா்.

இதில், வைரமூா்த்தி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக சிறை மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மூச்சுத் திணறல் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மறியல்: இதனிடையே, வைரமூா்த்தியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, புளியங்குடியில் பேருந்து நிலையம் அருகே அவரது உறவினா்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஏடிஎஸ்பி சங்கா், டிஎஸ்பி மதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிட்டனா். இப்போராட்டத்தால் தென்காசி-மதுரை சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.