வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி: இளம்பெண் தற்கொலை முயற்சி

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:33 pm

பாளையங்கோட்டை அருகே அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் கிராமத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள்.

பட்டதாரியான இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான லீலாவதி என்பவா் சத்துணவு அமைப்பாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த ஜான்சிராணி என்பவரிடம் அழைத்துச் சென்றாராம்.

பின்னா் வேலை பெறுவதற்காக ரூ.4.5 லட்சத்தை அவா்களிடம் கல்லூரி தோழி மூலமாக அந்த இளம்பெண் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பல மாதங்கள் ஆகியும் சொன்னபடி அவா்கள் வேலை வாங்கித் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து அவரை காப்பாற்றிய அவரது பெற்றோா், பண மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.