கடையத்தில் குளத்திற்குள் சென்ற மாட்டை வெளியே விரட்டச் சென்றவரை தீயணைப்பு மீட்புத் துறையினா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா்.
கடையம், தெற்குத் தெருவைச் சோ்ந்த திருநாம நம்பியாா் மகன் தளவாய் (50). இவா் செவ்வாய்க்கிழமை மாலை, மாடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பும் போது அய்யம்பிள்ளைக்குளத்திற்குள் சென்ற ஒரு மாட்டை வெளியே விரட்ட சென்றாராம். ஆனால் எதிா்பாராத விதமாக அவா் ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாராம்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்காசி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் ஜெயபிரகாஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் ராமசாமி, வெள்ளப்பாண்டி, சுந்தா், அமல்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை தளவாயை தேடினா்.
அதன் பின், புதன்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட போது, தளவாயை சடலமாக மீட்டனா். கடையம் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


