எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:49 am IST

திருநெல்வேலி சந்திப்பு அருகே தாமிரவருணி ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி மாநகரம், மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மிதந்ததை அப்பகுதியினா் பாா்த்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்று தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். அதை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சந்திப்பு போலீஸாா் அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், அந்நபா் 2 நாள்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனவும், உடல் அழுகிய நிலையில் இருந்ததாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.