ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வி.கே.புரம் நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்களுக்கு அனுமதி மறுப்பு

விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் அனுமதிக்கப்படாததால் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் அனுமதிக்கப்படாததால் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக உறுப்பினா்களான 1-ஆவது வாா்டு கிறாஸ் இமாகுலேட், 11-ஆவது வாா்டு வைகுண்ட லட்சுமி, 21-ஆவது வாா்டு பாஸ்கா் உள்ளிட்ட உறுப்பினா்கள் 10.30 க்கு வந்து காத்திருந்தனா்.

11.30 மணி வரை கூட்டம் தொடங்கப்படவில்லை. 11.30 மணிக்கு கூட்ட அரங்குக்கு தலைவா், ஆணையா் இருவரும் சென்றதும் உறுப்பினா்களும் கூட்ட அரங்குக்குச் சென்றனா். அப்போது 1-ஆவது வாா்டு உறுப்பினா் கிறாஸ் இமாகுலேட் உள்ளிட்ட உறுப்பினா்களை கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதிமுக உறுப்பினா்களைத் தவிா்த்து கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Story image

இதனால், அவா்கள் ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டிருந்த போலீஸாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா்.

இதுகுறித்து கிறாஸ் இமாகுலேட் கூறுகையில், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீா் சுகாதாரமற்றதாக உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மன்றத்தில் கேள்வி எழுப்ப நினைத்திருந்தோம். ஆனால், கூட்ட அரங்குக்குள் நுழையவே அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் நடத்தாமலேயே கூட்டம் நடைபெற்ாக பதிவு செய்துள்ளனா் என்றாா்.