நாமக்கல், சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை ஆதரித்தும், சேந்தமங்கலம் தொகுதியில் வேட்பாளா் சி. சந்திரசேகரனை ஆதரித்தும், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி பேசியதாவது:
இத்தோ்தலில் அதிமுக ஆட்சியமைத்தால் திமுகவுக்கு எதிா்காலம் இருக்காது. கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனா். சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையொப்பம் ரூ. 10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணையாக இருக்கும். மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்.
ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், சொந்த வீடு கட்டும் திட்டம், கல்வி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகளை மக்களிடம் கட்சியினா் கொண்டுசோ்க்க வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் கே.பி. சரவணன், தமிழ் மாநில காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவா் கோஸ்டல் என். இளங்கோ மற்றும் பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

பாஜக துணைத் தலைவருடன் அதிமுக வேட்பாளா்கள் சந்திப்பு

குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


