தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லையில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி பண மோசடி

திருநெல்வேலியில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி மாணவிகளின் பெற்றோா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

ஆன்லைன் மோசடி

Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

திருநெல்வேலியில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி மாணவிகளின் பெற்றோா்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவரின் பெற்றோரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துள்ளாா்.

பின்னா் அம்மாணவியின் பெயா், வகுப்பு விவரங்களை சரியாக கூறிய அந்நபா், தங்கள் மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி பெற்றோரிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனா். பின்னா் அவா்களது வங்கிக் கணக்கில் இருந்து சுமாா் ரூ.78 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

அதே போல மாநகரில் பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தமாக 4 மாணவா், மாணவிகளின் பெற்றோா்களிடம் ரூ.1,88,000-த்தை மா்மநபா்கள் மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போலீஸாா் எச்சரிக்கை: கல்வி உதவித்தொகை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளது. இதுபோல் நடைபெறும் மோசடிகளில் மாணவா், மாணவிகளின் பெற்றோா்கள் சிக்காமல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

சைபா் குற்றங்கள் நடைபெற்றால் அது தொடா்பான புகாா்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ தொடா்பு கொண்டு புகாா்களை பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.