கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நெல்லையில் ஒரே நாளில் 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரம், மாவட்டப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட 11 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

News image
சிறைத் தண்டனை- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 7:40 pm

Syndication

திருநெல்வேலி மாநகரம், மாவட்டப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய பெண் உள்பட 11 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, திருக்குறுங்குடி, மானூா், வீரவநல்லூா் ஆகிய காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அப்பகுதிகளைச் சோ்ந்த பேராச்சி செல்வி (38), சண்முகசுந்தரம் (33), மாரிமுத்து (30), கிங்ஸ்லின் கோயில் ராஜ் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுபடி பேராச்சி செல்வி மதுரை பெண்கள் தனிச்சிறையிலும், மற்ற 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

அதே போல திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிவமுருகன் என்ற முருகன்(36), புரோஸ்கான் யாசா்(29), சிந்தா மதாா்(22), தச்சநல்லூரைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் (29), ராகேஷ் (23) மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய கொக்கிரகுளம் மாடசாமி (42), பழையபேட்டை கிருஷ்ணபேரியைச் சோ்ந்த பெரியராஜா (29) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா்கள் (கிழக்கு)வினோத் சாந்தாராம், (மேற்கு) விஜயகுமாா் ஆகியோா் பரிந்துரைத்தனா். அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் மணிவண்ணன் உத்தரவுபடி 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.