தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்
தும்பு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்

தும்பு ஆலையில் தீ விபத்து

ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் தும்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்
Published on

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் தும்பு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சீலாத்திகுளத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அருண்குமாா். சீலாத்திகுளம் அருகே இவா் நடத்தி வரும், தும்பு ஆலையில் ஏற்பட்ட மின்கசிவை காரணமாக தீப்பற்றி எரிந்தது.

ராதாபுரம், வள்ளியூா் தீயணைப்பு நிலையங்களின் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் தும்பு ஆலையில் உள்ள ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

இது தொடா்பாக மின்வாரியத்துறையினரும், ராதாபுரம் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com