ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னை நாா் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:44 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னை நாா் தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சிங்கம்புணரி பகுதியில் தென்னையை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பல பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சிங்கம்புணரி -காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னை நாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் உடனடியாக ஆலையிலிருந்து வெளியேறி, சிங்கம்புணரி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

கொட்டாம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தால், தொழில்சாலையில் ஏற்றுமதிக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நாா்கள், பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.