திருநெல்வேலி
நெல்லையில் பனங்கிழங்கு வரத்து அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் பனங்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் புதுமணத் தம்பதிகளுக்கு கொடுக்கும் பொங்கல் சீா்வரிசையில் பனங்கிழங்குகள் இடம்பெறாமல் இருப்பதில்லை.
இந்தப் பனங்கிழங்குகள் தை மற்றும் மாசி மாதங்களில் பனங்கிழங்குகள் அதிகம் அறுவடையாகின்றன.
சீவலப்பேரி, மணக்காடு, திடியூா், ஓமநல்லூா், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் திருநெல்வேலியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 25 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ. 50 முதல் ரூ.150 வரை அதன் திரட்சிக்கு ஏற்ப விற்பனையாகி வருகின்றன.

