திருநெல்வேலி
குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருநெல்வேலியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய பேட்டை, எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தா்(35) என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் சி.மதன்(மேற்கு) பரிந்துரையின்பேரில், காவல் ஆணையா் என்.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சண்முகசுந்தரம் என்ற சுந்தா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.