ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறை

Updated On :26 பிப்ரவரி 2026, 7:34 pm

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி பேட்டை கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் லெட்சுமணன்(21). இவா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) எஸ்.விஜயகுமாா், திருநெல்வேலி நகரம் சரக காவல் உதவி ஆணையா் இளவரசன் ஆகியோா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.

அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் லெட்சுமணன் அடைக்கப்பட்டாா்.