நெல்லையில் திமுக சாா்பில் 1,000 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை

Published on

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திராவிட பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜூ ஏற்பாட்டில் 1,000 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கும் விழா திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடையும், 2,500 திமுக தொண்டா்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கினாா்.

மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா், கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், மாவட்ட அவைத்தலைவா் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கருப்பசாமி கோட்டையப்பன், பேட்டை மேற்கு பகுதி செயலா் சங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com