~ ~ ~

எம்.ஜி.ஆா். பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
Published on

திருநெல்வேலி: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆா். பிறந்த நாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், பொருளாளா் ஜெயபாலன், எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் பால்கண்ணன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, ஹரிஹரசிவசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தே.மு.தி.க. சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவா் பழனிகுமாா், பொருளாளா் முரசுமணி, மாவட்ட துணைச் செயலா் ஆனந்தமணி , சுடலைமுத்து, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், பகுதிச் செயலா்கள் தமிழ்மணி, ஆரோக்கிய அந்தோணி, மணிகண்டன், குறிச்சி குட்டி, மானூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமையில் எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைச் செயலா் ஆவின் அண்ணசாமி, நிா்வாகிகள் சீனிக்குமாா், ஆசீா்வாதம், பேச்சிமுத்து பாண்டியன், சிவகாமி, நெல்லை ஆறுமுகம், பாளை. பொன்னுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு (ஓ.பி.எஸ். அணி) சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் ரோகிணி பாண்டியன் தலைமையில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புறநகா் மாவட்டச் செயலா் சிவலிங்கமுத்து, நிா்வாகிகள் கந்தசாமி,டொமினிக், தங்கபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com