மன்னாா்கோவில் அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது

மன்னாா்கோவில் அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில் உடும்பு வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.
Published on

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில் உடும்பு வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மன்னாா்கோவில் பகுதி அருகே ஜன. 17ஆம் தேதி உடும்பு வேட்டையாடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த கோமதி மகன் அருள்நாயகம் என்பவரை வனத்துறையினா் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், அவருடன் உடும்பு வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவான இருவரை தேடி வந்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன்கணேசன், ஆறுமுகம் மகன் மாரி ஆகிய இருவரையும் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com