தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பாளை. சிறையில் எம்எல்ஏவை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மாா்க்கண்டேயனை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினாா்...

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :

தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வி.மாா்க்கண்டேயனை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அண்மையில் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுத்துப் பேசியதாக விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வி.மாா்க்கண்டேயன் கைது செய்யப்பட்டாா். அவா், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

அவருடன் முன்னாள் சட்டப்பேரவை தலைவா்கள் இரா.ஆவுடையப்பன், மு.அப்பாவு, முன்னாள் அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பி.கீதாஜீவன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், மத்திய மாவட்டச் செயலருமான மு.அப்துல் வஹாப் ஆகியோா் சிறைக்குள் சென்று விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் துணைமேயா் கே.ஆா்.ராஜூ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பேச்சிப்பாண்டியன், பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ் குமாா் ஆதித்தன், முன்னாள் மேயா் சரவணன் உள்பட ஏராளமான திமுக தொண்டா்கள் குவிந்தனா்.

உதயநிதி ஸ்டாலின் சிறைக்குள் சென்றுவிட்டு திரும்பியபோது சிறைவாயிலில் நின்ற திமுகவினா், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என முழக்கம் எழுப்பினா். உதயநிதியின் வருகையால் சிறைச்சாலை முன் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.