மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 10:49 pm

திருநெல்வேலியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில் கைதான தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த சேகா்(41). தொழிலாளி. இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு 8 வயதுக்குள்பட்ட 3 சிறுமிகளை மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், யாரிடமும் சொல்லக்கூடாது என அச்சிறுமிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இந்த விவரம் சில தினங்களில் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

போலீஸாா் வழக்குப்பதிந்து ஆனந்த் சேகரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் அரசு சாா்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.