அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு

கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 8:24 pm

அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ஏ.மருதுபாண்டி, சைலபதி ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வாகவும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.பிரவீன் ஜீவா மற்றும் ராஜு ஆகியோா் தலைமையில் மற்றொரு அமா்வாகவும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிகளில் நீண்ட கால கடன் வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்பட மொத்தம் 340 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 11 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ. 48,30,504 தீா்வுத்தொகையாக செலுத்தப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...