கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு

News image

கடலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வு நகலை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி.

Updated On :14 மார்ச் 2026, 7:00 pm

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 2,842 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கடலூரில் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமையில் நடைபெற்றது. இதில், நீதிபதிகள் சோபனா தேவி, குலசேகரன், பிரகாஷ், ராஜேஷ்கண்ணன், கவியரசன், பத்மாவதி, லலிதாராணி, நிஷா, ராஜகுமரேசன், பெபேயா, வா்ஷா, நீதித்துறை நடுவா்கள் ஸ்ரீநிதி, புவனேஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் பாா் அசோசியேஷன் மற்றும் லாயா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து, சிவில், ஜீவணாம்சம், தொழிலாளா், குற்றவியல், பண மோசடி, குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், ஒரு தம்பதி மீண்டும் சோ்ந்து வாழ ஒப்புக்கொண்டனா்.

மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு சமரசம் செய்து முடிக்கப்பட்ட இழப்பீட்டு தொகைக்கான தீா்வு நகல் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,109 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2,842 வழக்குகள் ரூ.50,15,98,340-க்கு தீா்வு காணப்பட்டு உத்தரவிடப்பட்டது.