சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

News image

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வு காணப்பட்டு ஆதாா் சான்றிதழ் வழங்கிய மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன்.

Updated On :14 மார்ச் 2026, 7:28 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,449 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நீண்ட நாள்களாக தீா்வு காணப்படாத வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பி.மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமனத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,496 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 2,449 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.14 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 816-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்வில் நீதிபதி என்.விஜயலட்சுமி, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் வேலு மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.