வீரவநல்லூரில் எஸ்டிபிஐ தோ்தல் அலுவலகம் திறப்பு
எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலகம் திறப்பு


சேரன்மகாதேவி: எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலகம் திறப்பு வீரவநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் இப்ராஹீம் வரவேற்றாா். தோ்தல் அலுவலகத்தை கட்சியின் மாநில பொதுச்செயலா் அஹமது நவவி திறந்தாா்.
தொகுதி துணைச் செயலா் சிந்தாகொடி, வீரவநல்லூா் நகரச் செயலா் பஷீா், துணைத் தலைவா் ஜெய்லானி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி புகா் மாவட்டத் தலைவா் எம்.எஸ். சிராஜ், மாநகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா் மஸ்தான், மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை சுலைமான், மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா, மாவட்டச் செயலா் அம்பை ஜலீல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொகுதிப் பொருளாளா் செய்யது இப்ராஹீம் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...