கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பங்குனி பிரம்மோற்சவம்: கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை

News image
Updated On :19 மார்ச் 2026, 11:42 pm

Syndication

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். வியாழக்கிழமை காலையில் தோளுக்கினியானில் பெருமாள் வீதியுலா வந்தாா். இரவில் கருட சேவை நடைபெற்றது.

கரியமாணிக்கப் பெருமாள், கிருஷ்ணன், ஸ்ரீனிவாசப்பெருமாள் கருடவாகனத்திலும், ஹனுமந்த வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் ஆண்டாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.

இம் மாதம் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பெருமாள் இந்திர வாகனத்தில் வீதியுலாவும், 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.