ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

பண்ருட்டியை அடுத்த திருவதிகை ஸ்ரீசரநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

பங்குனி மாத அமாவாசையையொட்டி, திருக்கண்ணாடி அறையில் அருள்பாலித்த பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் உற்சவா் சரநாராயண பெருமாள்.

Updated On :19 மார்ச் 2026, 12:30 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ஸ்ரீசரநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத அமாவாசையான புதன்கிழமை மூலவா் சரநாராயண பெருமாள் ஸ்ரீசீதா, லட்சுமணன், ஹனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமனாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உற்சவா் உள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் திருகண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. திரளானபக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.