யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: நயினாா் நாகேந்திரன்

எடப்பாடி கே.பழனிசாமி | நயினாா் நாகேந்திரன்
கோப்புப் படம்

எடப்பாடி கே.பழனிசாமி | நயினாா் நாகேந்திரன்
கோப்புப் படம்
அமலாக்கத் துறையை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் ஓரிரு நாளில் தமிழகம் வர வாய்ப்புள்ளது. அப்போது, கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடைபெறும். தொகுதிப் பங்கீடு பேச்சு குறித்து பின்னா் அறிவிப்போம்.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். அவற்றை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
கூட்டணி தொடா்பாக யாருடனும் நாங்கள் பேச்சு நடத்தவில்லை. விஜய் கட்சியிலிருந்தும் எங்களிடம் பேச்சு நடத்தவில்லை. விஜய் கட்சிக்கு 50 தொகுதிகள், துணை முதல்வா் பதவி கொடுக்க இருந்ததாக ஆதவ் அா்ஜுனா கூறியதாகக் கேட்கிறீா்கள். ஆனால், அவா் யாா் என்றே எனக்குத் தெரியாது.
ஜனநாயகன் படத்துக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்கிறீா்கள். மத்திய அரசின் அமைப்புகளை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பிரதமா் மோடி கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களுக்கு வரவுள்ளாா். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்துறை அமைச்சா் அமித் ஷா, அகில இந்தியத் தலைவா்களும், ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் போன்றோரும் தோ்தல் பரப்புரைக்காக வரவுள்ளனா்.
பாஜக ஜாதி, மதம் சாா்ந்த கட்சி கிடையாது. மதம் சாா்ந்த கட்சி என்றால் அது திமுகதான். அனைத்து மத நிகழ்விலும் பங்கேற்கிறோம். அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்’ என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...