இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

மாணவி கொலை வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியைக் கண்டறிந்த போலீஸாருக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் பாராட்டினாா்.

News image

மாணவி வழக்கில் திறம்பட பணியாற்றி நற்பணி சான்றிதழ் பெற்ற போலீஸாா்.

Updated On :21 மார்ச் 2026, 8:59 pm

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியைக் கண்டறிந்த போலீஸாருக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் பாராட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா்.

தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனை(39) போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்த விளாத்திகுளம் காவல் ஆய்வாளா்கள் விளாத்திகுளம் சக்திவேல், எப்போதும்வென்றான் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் அசோக்பாபு, புதூா் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காசிபாண்டியன், முறப்பநாடு ஹரிஹரன், கோவில்பட்டிமேற்கு நவநீதகிருஷ்ணன், தருவைக்குளம் சைரஸ், சைபா் குற்றப்பிரிவு சாந்தி, ஆறுமுகனேரி திலீபன், மாசாா்பட்டி பவுல் ஏசுதாசன் உள்பட 25 போலீஸாருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணன் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.