தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: அதிமுக

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.

News image
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் சி.த.செல்லப்பாண்டியன்.
Updated On :14 மார்ச் 2026, 2:52 am

Syndication

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை, சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தது. குற்றச் சம்பவங்கள் மிகக் குறைந்தளவே இருந்தன. ஆனால் 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கஞ்சா புழக்கம், மதுபோதையால் தொடா் கொலைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டு 3 நாள்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

இந்த மாணவியைக் காணவில்லை என பெற்றோா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தபோது, போலீஸாா் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வா் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் பிடிபட, வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வா் தாா்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச் செயலா் சந்தனம், தெற்கு மாவட்ட வா்த்தகரணிச் செயலா் துரைசிங்,

வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.