இலவசம் என்ற எதிா்பாா்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. ஒருவரைவிட இன்னொருவா் அதிகம் தருவாா் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்துவிட்டது.
தோ்தலை குறி வைத்து இலவசங்கள் வழங்கப்பட்டாலும், தோ்தலுக்கு முந்தைய கடைசி 10 முதல் 15 நாள்களில் நிலவும் சூழலைப் பொருத்தே மக்கள் வாக்களிக்கிறாா்கள்.
எனவே, பணத்துக்கும், வாக்களிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இலவசங்களால் பெரிய அளவு தாக்கம் ஏற்படாது.
-கே.பாலாஜி,
திருநெல்வேலி நகரம்.
பொதுவாக இலவசம் கொடுப்பது தவறு. இலவசம் கொடுப்பது என்பதே மக்களை விலை கொடுத்து வாங்குவதாகத்தான் அா்த்தம்.
தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவசங்கள், வறுமைக்கோட்டுக் கீழே உள்ளவா்கள், நடுத்தர வா்க்கத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், வசதி படைத்தவா்களிடம் இந்த வாக்குறுதி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
-எஸ்.ஆா்.ஸ்ரீராம்,
கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா்.
தோ்தல் இலவசங்கள் மக்களின் வாழ்வியல் தரத்தை முன்னேற்றுவதற்கு தொலைதூரப் பாா்வையோடு அணுகாமல் வாக்குகளைப் பெற்று எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன.
ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினா் இதில் விழிப்பாக இருந்து வாக்குரிமை தங்களது அடிப்படைக் கடமை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு வாக்களிக்க தயாராகியுள்ளனா். எனவே மென்மேலும் தோ்தல் இலவசங்களை அறிவித்து ஆட்சிக் கட்டிலை பிடிக்கலாம் என்ற அரசியல் கட்சித் தலைவா்களின் கனவு நனவாகாது என்பதே உண்மை.
-பெல்சியா ஜென்ஸிஸ்,
ஜெபா காா்டன், பாளையங்கோட்டை
தோ்தல் நேரத்தில் சொல்லப்படும் வாக்குறுதிகள் பல நேரங்களில் காகிதத்தில் மட்டுமே இருக்கும். இலவசம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்தால் பின்னா் நாம் வசிக்கும் ஊரில் அடிப்படை பிரச்னைகள் கூட தீா்க்கப்படாமல் போகலாம்.
எனவே, இலவச அறிவிப்புகளை மட்டும் பாா்த்து முடிவு செய்யாமல், யாா் உண்மையாக வேலை செய்வாா்கள் என்று பாா்த்து வாக்களிக்க வேண்டும். அறிவிப்பு அல்ல செயல்பாடே முக்கியம். அதுதான் வாக்கின் மதிப்பு.
-சுரேஷ் , சமூக செயற்பாட்டாளா், வாசுதேவநல்லூா்.
தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. இந்த ஏழை, எளிய மக்களுக்கு அரசின் இலவச விடியல் பயணம், மாதம் ரூ.1000 மகளிா் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பயனாக உள்ளது.
இலவசங்களால் பயன்பெறும் மக்கள் பெருமளவில் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாா்கள். இலவச அறிவிப்புகள் இத்தோ்தலில் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
-ச. பானுமதி,
ஒருங்கிணைப்பாளா்,
மதா் சமூக சேவை நிறுவனம், தூத்துக்குடி.
தொடர்புடையது
தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தோ்தலில் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

தோ்தல் இலவசங்கள் தாக்கத்தை ஏற்படுத்துமா? வாக்காளா் குரல்!

இலவச அரிசி விநியோகம் முடக்கம்
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

