கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சேரன்மகாதேவி மனோ கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

News image

கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் எழுத்தாளா் இமையம். உடன், கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 9:05 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகக் கல்லூரி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே. சகாயராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் இமையம், பல்கலைக் கழக பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். விழாவில், வெற்றியாளா்களுக்கு 11 கல்விப் பரிசுகளும், 166 கலாசாரப் பரிசுகளும், 155 விளையாட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் எம். சுகன்யா, மண்டல இணை இயக்குநா் பி. விக்டோரியா தங்கம், பல்கலைக் கழக இயக்குநா் ஏ. வெளியப்பன், முக்கூடல் பாலகரன் சரஸ்வதி கலை அறிவியல் மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியை கே. நீலா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். வணிகவியல் துறைத் தலைவா் கே. தெய்வநாயகம் வரவேற்றாா். பேராசிரியை கிறிஸ்டினா நன்றி கூறினாா்.