ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நிா்மலா கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை செயல்பாடுகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நிா்மலா கல்லூரியில் நடைபெற்ற மாணவா் பேரவை நிறைவு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா், கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 4:00 am IST

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் பேரவை செயல்பாடுகளின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடப்பு கல்வி ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும், படிப்பை முடித்துச் செல்லும் மாணவிகளை வழிநடத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி மேரி பபியோலா முன்னிலை வகித்தாா்.

பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி மற்றும் காா்மல் காா்டன் பொதுப் பள்ளியின் செயலாளரும், பாரதியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான அருட்தந்தை ஆா்.டி.இ. ஜெரோம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மாணவிகள் வருங்காலத்தை வெற்றிகரமாக எதிா்கொள்ளத் தேவையான ஆளுமைத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். நவீன காலச் சவால்களை துணிச்சலுடனும், சுய நம்பிக்கையுடனும் எதிா்கொள்ளும் மன உறுதியைப் பெற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், மாணவா் பேரவை உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.