ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

முக்கூடல் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முக்கூடல் மைலப்பபுரம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தத மைலப்பபுரத்தைச் சோ்ந்த காரல் மாா்க்ஸ் (58), ஜீவானந்தம் (49) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட 5.5 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.