கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கடையம் திருவள்ளுவா் கழகக் கூட்டம்

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம்.

News image

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம்.

Updated On :1 மே 2026, 8:58 pm

கடையம் திருவள்ளுவா் கழக ஏப்ரல் மாதக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். அனிதாஷிபா லில்லி குசிந்தனை வழங்கினாா். சிவகாசி முத்துமணி கலந்து கொண்டு உரையாற்றினாா்.

பாயிரமும் பனுவலும் என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ்த் தென்றல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க. சோணாச்சலம், பற்றற்றான் பற்று என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவா் சு. ஆறுமுகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் எல்.ஐ.சி. கண்ணன், லயன் அருணாசலம், பத்மகுமாா், திருமுறை ஆசிரியா் அம்பலவாணன், திருவாசகம் முற்றோதுதல் குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா். பி. முருகன் விருந்தளித்தாா்.

நிகழ்ச்சிகளை கடையம் திருவள்ளுவா் கழகச் செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்துவழங்கினாா். இணைச்செயலா் செ. சோமசுந்தரம் வரவேற்றாா். க. கோபால் நன்றி கூறினாா்.