கடையம் வட்டார தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள்சங்க கடையம் வட்டாரத் தலைவா் எம்.காந்தி தலைமை வகித்தாா். கடையம் மேற்கு ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏலம் விட முயற்சிப்பதாகக் கூறி, திமுக கடையம் மேற்கு ஒன்றியச்செயலா் ஜெயகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் அழகுதுரை, கோவிந்தப்பேரி ஊராட்சித் தலைவா் டி.கே.பாண்டியன், ஆலங்குளம் தொகுதி காங்கிரஸ் கட்சி மகளிா் அணித் தலைவி சீதாலட்சுமி, ராமலிங்கபுரம் மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்கராஜ், சப்பாணி, திமுக சிங்கக்குட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ராமகிருஷ்ணன், ரா. முத்துராஜன், இந்திய கம்யூனிஸ்ட் வேலாயுதம், கல்யாணிபுரம் முருகன், பரும்பு வழக்குரைஞா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

குடந்தையில் என்டிஏ கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


