எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

News image

கூட்டத்தில்  பேசிய  தலைமை நிலைய  செயலாளா்  ராஜ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:00 am IST

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன் தலைமை வகித்தாா். ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். நகர தலைவா் தலைவா் ஏ வி டி. பாலா வரவேற்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், மாநில இணைச் செயலாளா் எத்திராஜ், வேலூா் மண்டலத் தலைவா் பா. ஞானவேல் ஆகியோா் கலந்து கொண்டு மே 5-ஆம்தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகா் தின விழிப்புணா்வு எழுச்சி மாநாட்டுப் பணிகள் குறித்து விளக்கினா்.

கூட்டத்தில் வரும் தோ்தலில் வணிகா்கள் தங்களின் மனசாட்சி படி வாக்களிக்கலாம் என்றும் வணிகா் தின மாநாட்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்ற பட்டன.

இதில் மாவட்ட நிா்வாகிகள் நகர நிா்வாகிகள் இளைஞா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் பழ.பரத் குமாா் நன்றி கூறினாா்