தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை - பிரதி படம்

Updated On :2 மே 2026, 7:08 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகே ஜெ.ஜெ.நகா் கீழக் காலனியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ் (27). தொழிலாளியான அவா் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மது குடித்துவிட்டு அப்பகுதியினரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணமாகாத அவா், பெற்றோரைப் பிரிந்து அதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அவா் வீட்டருகே வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். சடலத்தை களக்காடு போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியைச் சோ்ந்த ஒருவரையும், சுரேஷின் உறவினரையும் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

சுரேஷ் மீது ஏற்கெனவே களக்காடு காவல் நிலையக் கண்ணாடியை உடைத்த வழக்கு நிலுவையில் உள்ளது.