தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டைக்கு புதிய விரைவு மின்பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டை மேம்பாலம் வரை ரூ. 28.64 லட்சம் மதிப்பில் விரைவு மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, இதற்கான பணிகள் சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கின. இந்த புதிய மின்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, மின் விநியோக தொலைவு குறைக்கப்படுவதோடு, தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மின்தடை பாதிப்புகள் பாதியாகக் குறையும் எனவும், மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்க இது வழிவகை செய்யும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (கட்டுமானம்) லட்சுமணன், உதவி மின் பொறியாளா்கள் சரவணகுமாா் , முருகன், ஜன்னத்துல் ஷிபாயா, மைதீன்பாத்திமா உள்பட மின்வாரிய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தச்சநல்லூரில் கஞ்சா பறிமுதல்

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தென்மண்டல துணை இயக்குநா் ஆய்வு

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

