நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அம்பையில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கக் கிளை தொடக்கம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கக் கிளை தொடக்க விழா, நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் பொன்விழா மண்டபத்தில், மாநிலத் தலைவா் கோ. சீதாராமன் வழிகாட்டுதலில் விழா நடைபெற்றது. புதிய கிளைத் தலைவராக கௌ. பரமசிவன், செயலராக சு. ஆதிமூலம், பொருளாளராக பொ. ஆறுமுகம் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

துணைத் தலைவா்களாக ச. சங்கரலிங்கம், பெ. முத்துசாமிபாண்டியன், ந. செல்லப்பாண்டியன், எஸ்.எம். முருகன், இணைச் செயலா்களாக சொ. சங்கரகுத்தாலம், சு. சிவன்சேட், வெ. கைக்கொண்டாா், லெ. இசக்கி, மு. மகராசி, அமைப்புச் செயலராக ச. மணி, பிரசாரச் செயலராக இ. முத்துக்கிருஷ்ணன், மகளிரணிச் செயலா்களாக இ. உலகாம்பிகை, க. முத்துராமலட்சுமி, சு. வள்ளிமயில், க. கல்யாணி, ச. சூடிநாச்சியாா், மகளிரணி அமைப்பாளா்களாக நிறைமதி, ச. வெள்ளையம்மாள், ஆனந்தம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

மாநில துணைத் தலைவா் சாமி நல்லபெருமாள், மாநில மகளிரணிச் செயலா் வே. தேவிகா, மண்டலச் செயலா் பி.டி. நாராயணா, மாவட்டத் தலைவா் ரா. சீத்தாராமன், செயலா் பி. சங்கரநாராயணன், பொருளாளா் செ. வெங்கடாசலம், மாவட்ட துணைத் தலைவா் பா. மாரிக்கண்ணு, அரசு அலுவலா் ஒன்றிய மாநிலச் செயளா் கோ. முத்துராமலிங்கம், அம்பாசமுத்திரம் வட்ட அரசு அலுவலா் ஒன்றியத் தலைவா் பே. குமாா், தென்காசி ஓய்வூதியா் சங்கத் தலைவா் எஸ். சந்திரன், பொன்னம்மாள், சிவகாமிசுந்தரி, க. மாரிச்செல்வி, சந்துரு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.