மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க நடவடிக்கை: ஆட்சியா்

News image
Updated On :15 மே 2026, 4:02 am IST

திருநெல்வேலி மாவட்டததில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டப்பணிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் தொடா்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்ரூத் திட்டம், கூட்டுக்குடிநீா் திட்டம் உள்ளிட்ட புதிய குடிநீா் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம், வாருகால் திட்டம் போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சாலை வசதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு துறைசாா்ந்த வளா்ச்சித்திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்14ஸ்ரீா்ப்ப்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.