திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் விநியோகம்

News image
Updated On :15 மே 2026, 4:03 am IST

திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன. ஏற்கெனவே பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவா்-மாணவிகளுக்காக தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தன. அவற்றை திருநெல்வேலியில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டிவிஎல்14புக்

பேட்டை மாநகராட்சி பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள்.