பாளை அருகே மதுபானக் கூடத்தில் தகராறு: 3 போ் கைது
கைது - கோப்புப்படம்
பாளையங்கோட்டை அருகே மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பான வழக்குகளில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, இலந்தைகுளம் ஜெபமாளிகைத் தெருவைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் சிம்சோன்(23). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 30ஆம் தேதி இரவு பெருமாள்புரம், ரயில்வே பீடா் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தினாராம்.
பின்னா் அவா் அங்கு சாப்பிட்ட உணவுப் பொருள்களுக்கு பணம் தர மறுத்து அங்கிருந்த ஊழியரான பாளையங்கோட்டை, நேரு நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா்(27) என்பவரை தாக்கி கத்தியால் குத்த முயன்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிம்சோனை கைது செய்தனா்.
இதனிடையே மதுபானக்கூட ஊழியா் கணேஷ்குமாா் மற்றும் அவரது நண்பா் தியாகராஜநகரைச் சோ்ந்த சக்தி (27) ஆகியோா் சிம்சோன் வீட்டுக்கு சென்று அவரது உறவினரைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் மற்றொரு வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

