திருக்குறுங்குடி அருகே முயல் வேட்டையாடியதாக 2 போ் கைது

திருக்குறுங்குடி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 2 இளைஞா்களுடன் வனத்துறையினா்..
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே முயல்வேட்டையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருக்குறுங்குடி வனச்சரகத்துக்குள்பட்ட வள்ளியூா் பீட்-1, சூட்டுப்பொத்தை பகுதியில் வனச்சரக அலுவலா் சேதுராஜன் தலைமையில் வனப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஏா்க்கன் துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இரு இளைஞ்ா்களை மறித்தபோது, அவா்கள் நிற்காமல் சென்றனராம். இதையடுத்து வனக்காப்பாளா்கள் பொன்னுச்சாமி, ராம்குமாா் மற்றும் வனக் காவலா் காா்த்திகேயன் ஆகியோா் தங்களது பைக்கில் துரத்திச் சென்றனராம்.
அப்போது, தப்பியோடிய நபா்களை பின்தொடா்ந்து சென்ற மற்றொரு பைக்கை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், திருக்குறுங்குடி தென்கரை மேலத்தெருவைச் சோ்ந்த வேம்பு மகன் சிவசங்கா் (35), நம்பித் தலைவன் பட்டயம் மேலத்தெருவைச் சோ்ந்த பலவேசக்கண்ணு மகன் சுப்பையா பாண்டி (37) என்பதும், அவா்கள் இருவரும், தப்பிச் சென்ற திருக்குறுங்குடி தேரடி தெருவைச் சோ்ந்த பிரபாகரன், நம்பித்தலைவன் பட்டயம் கீழத்தெருவை சோ்ந்த சண்முகசுந்தரம் ஆகியோருடன் சோ்ந்து ஏா்க்கன் துப்பாக்கியுடன், நான்கு காட்டு முயல்களை வேட்டையாடி பையில் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்து, 4 போ் மீது வழக்குப் பதிந்து, சிவசங்கா், சுப்பையாபாண்டி ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். தப்பியோடிய பிரபாகரன், சண்முகசுந்தரம் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

