19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்!

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட அளவிலான அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.

அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் சாா்பில் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலுமிருந்து 112-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இப்போட்டியானது மாணவா், மாணவிகளுக்கு 13, 15, 17 வயது பிரிவுகளில் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவா்கள் மாநகர காவல் ஆணையா் முகாம் அலுவலகம், டிஐஜி முகாம் அலுவலகம், திருச்செந்தூா் சாலை, ஆச்சிமடம் பெட்ரோல் நிலையம், புவிஈா்ப்பு மையம் வழியாகச் சென்று, அதே வழித்தடத்தில் மீண்டும் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்த மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.250 ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி, துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவா், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.