சுத்தமல்லியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
சுத்தமல்லியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
சுத்தமல்லியில் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் நத்தோடு தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் சமுதாய நலக் கூடம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அத்திமேடு, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாராஜா என்ற வடிவேல்(27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது அவா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியதோடு, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மகாராஜா என்ற வடிவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

