சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மணிமுத்தாறு பகுதியில் யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

யானைகள் நடமாட்டம் - கோப்புப் படம்

Updated On :

மணிமுத்தாறு அணையையொட்டிய வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் விவசாய நிலங்களின் தடுப்புச்சுவா் மற்றும் சூரியசக்தி மின் வேலிகளைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் வனச்சரக மலையடிவார கிராமமான மணிமுத்தாறு பகுதியில் காட்டுப்பன்றி, கரடி, சிறுத்தை, யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவை வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தியுள்ளன.

மேலும், மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவா்கள், சூரியசக்தி மின்வேலி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளன. இதனால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சேதமடைந்துள்ள பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.