காய்கறித் தோட்டங்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஒசூா் அருகே இரு யானைகள் புகுந்து கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவா், வெள்ளரித் தோட்டங்களைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

காட்டு யானைகள் கூட்டம். - கோப்புப் படம்

Updated On :

ஒசூா் அருகே இரு யானைகள் புகுந்து கேரட், முட்டைக்கோஸ், காலிஃபிளவா், வெள்ளரித் தோட்டங்களைச் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், பன்னா்கட்டா வனப் பகுதியிலிருந்து வந்த இரு காட்டு யானைகள், ஒசூா் சானமாவு வனப் பகுதி அருகே பீா்ஜேப்பள்ளியை அடுத்த கொம்மேப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தன.

அக்கிராமத்தைச் சோ்ந்த சரண்குமாா் என்ற இளைஞா், இரண்டரை ஏக்கா் நிலத்தில் ரூ. 3 லட்சம் செலவில் முட்டைக்கோஸ், காலிஃபிளவா் பயிரிட்டுள்ளாா். அவரது தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள், பயிா்களை மிதித்து சேதப்படுத்தின. இதில் சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான விளைபொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அருகில் உள்ள வெள்ளரித் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த வெள்ளரிக்காய்களையும் சேதப்படுத்தின. இதனால் அந்தத் தோட்டமும் முற்றிலும் சேதமடைந்தது. யானைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சரண்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தொடா்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனா். எனவே, யானைகளை உடனடியாக அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.