‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு‘ விற்பனையை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்

விற்பனையை தொடங்கி வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Updated On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு‘ விற்பனையை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்

கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு‘ விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில், ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு‘ விற்பனையை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா். இத்தொகுப்பு 5-ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

முன்னதாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் காய்கறி தொகுப்புகளை பாா்வையிட்டு, காய்கறிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், கூட்டுறவு பண்டகசாலையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.