குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பாளை. வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலைய படிப்பகத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய படிப்பகத்தை பாா்வையிட்டு, மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம், காலாவதி நாள், உற்பத்தி நிறுவனத்தின் பெயா் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், தத்தெடுப்பு மற்றும் ஆலோசனை மையத்தின் செயல்பாடுகள், முதியோா் இல்லம், குழந்தைகள் இல்லம் மற்றும் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிகளின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவேடுகள் பராமரிப்பு, நிலுவை மனுக்களின் நிலை, அவற்றுக்கு பதில் அனுப்பிய விவரம் போன்றவை குறித்து கேட்டறிந்ததுடன், மேலப்பாளையம் பகுதியில் கழிவுநீா் அகற்றுவது தொடா்பாக அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

மேலும், இந்த வட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வினய்குமாா் மீனா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் ச. பிரியா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரோஷன்பேகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.