தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

வ.உ.சி. நினைவு நாளில் தகராறு: சிறுவன் உள்பட 3 போ் கைது

வ.உ.சி. நினைவு நாளில், திருநெல்வேலி வ.உ.சி. மணிமண்டபம் அருகே தகராறில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

வ.உ.சி. நினைவு நாளில், திருநெல்வேலி வ.உ.சி. மணிமண்டபம் அருகே தகராறில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு, கடந்த 18 ஆம் தேதி திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அப்போது அங்கு போக்குவரத்துக்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டவா்களை போலீஸாா் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனா். இந்நிலையில் அங்கு வந்த வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த சிலா் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த பாலமுருகன்(21), அழகா் (30) மற்றும் ஒரு சிறுவனை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.