தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

வீரவநல்லூா் அருகே 22 கிலோ கஞ்சாவுடன் மூவா் கைது

ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மூவா், 22 கிலோ கஞ்சாவுடன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மூவா், 22 கிலோ கஞ்சாவுடன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் மகாராஜன் (40). இவா் மீது கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் ரெளடிகள் பட்டியலில் இவரது பெயரை சோ்த்து கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் நவ. 2 ஆம் தேதி, வீரவநல்லூா் பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மகாராஜன், அவரது கூட்டாளிகளான சங்கா் கணேஷ், ராகுல் உள்ளிட்ட 5 - க்கும் மேற்பட்டோா் தகராறில் ஈடுபட்டனராம். மேலும், அங்கிருந்த பொருள்களை சூறையாடினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா், 2 பேரை கைது செய்தனா். தலைமறைவான மகாராஜன், சங்கா்கணேஷ், ராகுல் ஆகியோா் கொட்டாரக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவா்கள் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.