தங்கும் விடுதியில் 1.2 கிலோ கஞ்சாவுடன் 6 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா், சின்னகோட்டக்குப்பத்திலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது அறை ஒன்றில் 6 போ் 1 கிலோ, 200 கிராம் கஞ்சாவுடன் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடா்ந்து அங்கு தங்கியிருந்த புதுச்சேரி முத்தியால்பேட்டை காமராஜா் தெருவைச் சோ்ந்த கே.கோகுல் (22), கீழ்செவராயன்பேட்டை செ.மணிமாறன் (25), புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் இந்திரா நகரைச் சோ்ந்த நா.மணிகண்டன் (20), கோ.தமிழ்மணி (22), பா.விமல்ராஜ் (19), கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சோ்ந்த ஆ.ரூபன் (24) ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா். மேலும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

